செவ்வாய், 8 டிசம்பர், 2009

விவசாயி


உலகம் உயருது - பல
உண்மைகள் புரியுது - ஏழை
நாடி நரம்பெல்லாம் - இன்னும்
வாடி வதங்குது

இவன்
நெல் விளைய மண் மிதிச்சான்
நேரம் பார்த்து தண்ணீர் விட்டான்
கால நேரமில்லாம காவல் காத்தான்
நெல் விளைந்து நெடு நெடுன்னு நிக்கையில - கடன்
கொடுத்தவன் நெல்ல கவர்ந்து கொண்டு போயிட்டான்

உலகம் உயருது - பல
உண்மைகள் புரியுது - ஏழை
நாடி நரம்பெல்லாம் - இன்னும்
வாடி வதங்குது

அரசாங்க சலுகைகள் அத்தனையும்
அரசியல்வாதிகள் வடிகட்டி புடிக்க
அதுல மிஞ்சிய ரெண்டு வடிஞ்சு - சாகுர
அடித்தட்டு மக்கள் வாயில விழுகுது வாய்க்கரிசி போல

உலகம் உயருது - பல
உண்மைகள் புரியுது - ஏழை
நாடி நரம்பெல்லாம் - இன்னும்
வாடி வதங்குது


உணவு,
தேடித் தேடியே தினம் ஆவியடங்குது - அந்தத்
தெருநாய் போலவே இவன் வாழ்வுமிருக்குது
ஒரு கவளச்சோருகூட இவனுயிர காக்குமப்பா,
உன் உள்ளத்தில் இடம் இருந்தா - இவன்
வயிற்று பள்ளம் நிறையுமப்பா

உலகம் உயருது - பல
உண்மைகள் புரியுது - ஏழை
நாடி நரம்பெல்லாம் - இன்னும்
வாடி வதங்குது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக