திங்கள், 11 ஜனவரி, 2010

காதல் கடிதம்


இன்று,
அதிகாலை 4 மணிக்குப்
பூத்திட்ட அதிசய பூ,
நீ.

ஐம்பூதங்களால் செய்யப்பட்ட
அபூர்வச் சிற்பம்,
நீ.

தித்திக்கப் பேசும் அந்த
திருகோயில் சிலை,
நீ.

உன்னைப் பார்த்த
கனத்திலிருந்தே பரிதவிக்கிறேன்,
மீண்டும் உன்னைப் பார்க்க.

கடலுக்குள் புகுந்திட
காற்றைப்போல, உன்
நினைவுகளால் நான் இங்கு
கலங்கி நிற்கிறேன்.

மிட்டாய் கேட்டு
கதறியழும் குழந்தையாய், என்
சொந்தங்களையெல்லம் உதறிவிட்டு
உந்தன் ஒரு சொல்லுக்காக
காத்திருக்கிறேன்.

தலையணை சுகம் உன்னால்
இன்று தர்மமானதடி.

பத்துமுறை பார்த்தும் (மனதில்)பதியாமல்
பலவுருவங்கள் இருக்க
ஒரே பார்வையில் எனக்குள்
புகுந்தவள் நீதானடி.

மண்ணில் விழுந்த விதை
மரமாவது போல், உன்
நினைவுகள் என்னுள் காதலாய்
வளர்ந்து, உயர்ந்து நிற்குதடி.

நிலமில்லாது பயிர் வளருமோ? - உன்
நினைவிலாது என்னுயிர் வாழுமோ?

சொல்,
மவுனம் காத்தது போதும்,
உன் மனதை திறந்து
பகிரங்கமாகச் சொல்; என்விழி
பார்த்துச் சொல்; உன்னுள் சென்ற
வளியை வார்த்தைகளாக்கிச் சொல்,
என்னை காதலிக்கிறேனென்று.


* காதல் கடிதம் - நண்பனுக்காக எழுதியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக