திங்கள், 11 ஜனவரி, 2010
காதல் கடிதம்
இன்று,
அதிகாலை 4 மணிக்குப்
பூத்திட்ட அதிசய பூ,
நீ.
ஐம்பூதங்களால் செய்யப்பட்ட
அபூர்வச் சிற்பம்,
நீ.
தித்திக்கப் பேசும் அந்த
திருகோயில் சிலை,
நீ.
உன்னைப் பார்த்த
கனத்திலிருந்தே பரிதவிக்கிறேன்,
மீண்டும் உன்னைப் பார்க்க.
கடலுக்குள் புகுந்திட
காற்றைப்போல, உன்
நினைவுகளால் நான் இங்கு
கலங்கி நிற்கிறேன்.
மிட்டாய் கேட்டு
கதறியழும் குழந்தையாய், என்
சொந்தங்களையெல்லம் உதறிவிட்டு
உந்தன் ஒரு சொல்லுக்காக
காத்திருக்கிறேன்.
தலையணை சுகம் உன்னால்
இன்று தர்மமானதடி.
பத்துமுறை பார்த்தும் (மனதில்)பதியாமல்
பலவுருவங்கள் இருக்க
ஒரே பார்வையில் எனக்குள்
புகுந்தவள் நீதானடி.
மண்ணில் விழுந்த விதை
மரமாவது போல், உன்
நினைவுகள் என்னுள் காதலாய்
வளர்ந்து, உயர்ந்து நிற்குதடி.
நிலமில்லாது பயிர் வளருமோ? - உன்
நினைவிலாது என்னுயிர் வாழுமோ?
சொல்,
மவுனம் காத்தது போதும்,
உன் மனதை திறந்து
பகிரங்கமாகச் சொல்; என்விழி
பார்த்துச் சொல்; உன்னுள் சென்ற
வளியை வார்த்தைகளாக்கிச் சொல்,
என்னை காதலிக்கிறேனென்று.
* காதல் கடிதம் - நண்பனுக்காக எழுதியது
வெள்ளி, 1 ஜனவரி, 2010
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
புத்தாண்டு - இது
புவியின் வளற்சியில்
இன்னும் ஓர் ஆண்டு.
தினம் தினம் வரும்
நாள்போல் இல்லாமல்,
இனிவரும் நாளெல்லம்
இன்பமாய் இருக்கட்டும்.
திக்கி திக்கி பேசும்
குழந்தை மொழிபோல,
தித்திப்பாய் இருக்கட்டும்
திகட்டாமல் இருக்கட்டும்.
இலங்கையில் நடந்தாற்போல்
இனியொரு கொடுமை
இந்தாண்டுமுதல் வேண்டாம்.
யாரோ,
கோடிகோடியாச் சேர்த்த பணமெல்லம்
தெருக்கோடியில் வாழும்
ரங்கனுக்கும் போய்ச்சேரட்டும்
சீரியல் பார்த்து பார்த்து
அழுதுசிவந்த முகம்,
இன்று ஒருநாளாவது சிரிக்கட்டும்
சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில்
முகம் பார்த்த நிலை மாறி - வழுக்கும்
கண்ணாடி சாலையில் முகம்பார்க்கும்
நிலை வரட்டும்.
சகலரும்,
சண்டை, சச்சரவு களைந்து,
மதங்களையெல்லம் மறந்து,
மனித உணர்வோடு
மகிழ்வாய் இருக்கட்டும்.
தரணி வாழ் அனைவரும்
என் தமிழ்ப் புத்தாண்டையும்
இதுபோல் கொண்டாடும்
நாள்வரட்டும்.
எதிர்காலம் அது உங்கள்
எண்ணம்போல் அமைய எனது
"புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"
- காளிராஜ்
லேபிள்கள்:
இலங்கை,
தமிழ்,
புத்தாண்டு கவிதை,
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்,
வாழ்த்து,
tamil
செவ்வாய், 29 டிசம்பர், 2009
பணம் - கவலை

பணம் (பணமற்ற மனிதன்)
வாடிய பூவை வண்டுகள் தேடலாம்
வற்றிய குளமதை வாத்துகள் தேடலாம்
பெய்யாத மேகங்கண்டு பொன்மயில் ஆடலாம் - பணம்
இல்லாத உனையிந்தப் பாரிலுள்ளோர் தேடுவரோ?
கவலை (சுற்றமிழந்த மனிதன்)
மண்ணுலகம் செழிக்க விண்ணுலகம் அழுகிறது
பிள்ளை நலம்வாழ பெற்றவள் அழுகிறாள்
கணவன் உயிர்காக்க தாலிகட்டியவள் அழுகிறாள் - மனிதா
எவ்வுயிர் காக்கநாளும் நீயிங்கு அழுகிறாய்?.
இந்த படத்திற்கேற்றார் போல் எழுத முயன்றது.
புதன், 23 டிசம்பர், 2009
மழையும் மண்ணும் மனிதனும்
விந்தாய் விழுந்து நண்டுபோல் ஊர்ந்து
கருவோடு கலந்து உருவொன்ரு கொண்டு
காற்றையும் கடன்பெற்று வாங்கி ஊனுடன்
உயிரும் பெற்றது வளர்ந்திடல் ஆனதே ----(1)
அப்பனின் வயிற்றில் ஓரிரு மாதமும்
அம்மையின் வயிற்றில் ஈரைந்து மாதமும்
முடங்கி யிருந்து முடிவில் முந்திக்கொண்டு
வெளிவந்து முழு முண்டமாய் விழுந்ததுவே ----(2)
மலர்ந்த உடன் மணம் வீசும் மலராய்
பிள்ளை மண்ணில் விழுந்தவுடனே வீறிட்டழ
கல் விழுந்தவுடன் கலங்கிப்போகும் குளமாய் - குழந்தை
பெற்றவள் உடலிங்கு நிலை குலைந்திட்டதே ----(3)
அலறல் ஒளி கேட்டே ஆடவர் அகமகிழ
பிள்ளைஒளி கேட்டே பெண்டீர் பெயர்தேட
சுற்றியிருந்த சுற்றம் இனிப்பைச் சுவைத்திருக்க - பூமி
குளிர்ந்திட பொத்தென்றே மழைவந்து விழுந்ததுவே ----(4)
உயிறற்ற சடலமா யுடைந்து கிடந்தவள்
தத்தி யெழும்புகிறாள் தண்டுடைந்த கொடிபோல
இழந்த சக்தியையெல்லாம் மீண்டும் இறுகப்பிடித்திழுத்தே
பெற்றவள் மயங்குகிறாள் பிள்ளையின ழகுகண்டே ----(5)
பிள்ளையை யேந்துகிறார் பெண்டீர் பெற்றவரிடத்தினிலே
முல்லைப் பூவைபோல பிள்ளையைக் கையிலேந்தி
தில்லை யரசனை யெண்ணி பெற்றவர்
கொள்ளை யழகுகொண்ட குழந்தைமுக நோக்கினாரே ----(6)
பேய்மழை பெய்துபெரு வெள்ளம் உருண்டுவர
மண்ணையும் மடுவையும் மழைநீர் மறைக்க
இடியின் கோரயிசைகேட்டு கூடியிருந்த வரெல்லம்
விழிபிதுங்கி கலங்கலானார் வீசுகின்ற காற்றையுங் கண்டே---(7)
ஆடும் அண்டி வாழும் நாயும்
ஓடும் எலியும் கொக்கரிக்கும் கோழியும்
பாடும் பச்சை கிளியும் பசியில்
வாடும் பூனையும் ஓடி ஒளிந்ததுவே ----(8)
வெளிச்சம் விலகிவிட்டது வெண்ணிலவோவர மறந்துவிட்டது
தெளிவற்ற மேகங்கண்டு பலர்தேம்பி நிற்கின்றார்
உருண்டுவந்த வெள்ளமது கதவை உந்தித்தள்ள
திரண்டுநின்ற மரமெல்லாம் திடீரென்று விழுந்ததுவே ----(9)
தொட்டிலி லிட்டார் பிள்ளையை கயிற்றுக்
கட்டிலி லிட்டார் கண்மலரா மங்கையை
அகல் விளக்கேற்றி பகல்போலாக்கி விட்டார்
வருகிற வினையறியாது வழக்கம்போலே பேசலானாரே --(10)
அடங்கிவிடும் மழையென்று அனைவரும் நினைத்திருக்க
ஒற்றைக் கண்கொண்டே காற்றுஓங்கி வீசிற்றேயது
வீட்டைப் பெயர்க்கப்பார்த்து விட்டத்தைப் பிரித்தேடுத்து
தொங்கிக் கொண்டிருந்த தொட்டிலையும் தூக்கிச்சென்றதுவே ---(11)
போர்க்களத்தில் எதிரியின் மேல்பாயும் அம்பாய்
சுற்றியிருந்த சுவரிடிந்து சுற்றத்தார் மேலேவிழ
வெள்ளம் புகுந்து வீட்டையும் நிரப்பிவிட
மின்னல் வந்திறங்கி மிரச்சியும் பண்ணிட்டதே ----(12)
ஓங்கி உயர்ந்திருந்த வீடுஉருக் குலைந்திருக்க - தண்ணீர்
தேங்கி நிற்கிறது தெரியும் திசையெங்கும்
கலகலவென இருந்த வீட்டில்கடுகளவு ஓசையில்லை - காற்று
கவர்ந்துபோன பிள்ளையைக் கண்டுபிடிக்கவும் ஆளில்லை ---(13)
வெள்ளி, 18 டிசம்பர், 2009
கணபதி
கைகூடாக் காரியமெல்லாம் கணப் பொழுதில் கைகூடும்
மெய்வாடி வருந்துவோர் மேனி யெழுந்துநடை போடும்
கொடும் பசிக்குணவும் நல்ல குலமகளும் தேடாச்செல்வமும் - xzfsdfsdfsdsadfsafsdfsdgassdfertghyjdgfdgdfgdfgdfadadadf தேடிவந்து
சேர்ந்திடும் கணபதியை யொருகணம் கருத்திடை வைப்போர்க்கு.
செவ்வாய், 8 டிசம்பர், 2009
காதல் - தேடல்
ஓடுற பொண்ணே நில்லு - உன்
உறவுக்காரன் யாருன்னு சொல்லு
வழிமறிக்கிறவரே கொஞ்சம் தள்ளு - மீரி
வந்து நின்னா தெரிக்கும் பல்லு (ஓடுற)
நீ, வாடி ஓடுரியே பாரு - இங்க
வந்து உட்கார்ந்து காரணத்தை கூறு
அந்தி மயங்கி விழுகிற நேரம் - என்னைக்
காணாமல் தேடும் என்வீடும் (ஓடுற)
பைத்தியமா நானும் இருக்க - உன்மேல்
பைத்தியமா நானும் இருக்க - நீயும்
வைத்தியம் பார்க்க வாராயோ கிழக்க
ஏ, பைத்தியமே கொஞ்சம் ஒதுங்கு - அரை
பைத்தியமே கொஞ்சம் ஒதுங்கு - அடி
விழுகிறதுக்கு முன்னே உன்வீட்ட நெருங்கு (ஓடுற)
தேடி வந்தேனே உன்னை - நாளும்
தேய்ந்து போறேனே கண்ணே
புரியுதடா உன் தாகம் - இது
ஆடி அடங்காத மோகம் (ஓடுற)
புரிந்தவளே இங்கே வா வா - கண்ணால்
என்னை கவர்ந்தவளே வா வா
போதுமடா இந்தப் பேச்சு - உன்னால்
வெகுநேரம் வீணாகிப் போச்சு
ஓடுற பொண்ணே நில்லு - உன்
உறவுக்காரன் யாருன்னு சொல்லு
வழிமறிக்கிறவரே கொஞ்சம் தள்ளு - மீரி
வந்து நின்னா தெரிக்கும் பல்லு
உறவுக்காரன் யாருன்னு சொல்லு
வழிமறிக்கிறவரே கொஞ்சம் தள்ளு - மீரி
வந்து நின்னா தெரிக்கும் பல்லு (ஓடுற)
நீ, வாடி ஓடுரியே பாரு - இங்க
வந்து உட்கார்ந்து காரணத்தை கூறு
அந்தி மயங்கி விழுகிற நேரம் - என்னைக்
காணாமல் தேடும் என்வீடும் (ஓடுற)
பைத்தியமா நானும் இருக்க - உன்மேல்
பைத்தியமா நானும் இருக்க - நீயும்
வைத்தியம் பார்க்க வாராயோ கிழக்க
ஏ, பைத்தியமே கொஞ்சம் ஒதுங்கு - அரை
பைத்தியமே கொஞ்சம் ஒதுங்கு - அடி
விழுகிறதுக்கு முன்னே உன்வீட்ட நெருங்கு (ஓடுற)
தேடி வந்தேனே உன்னை - நாளும்
தேய்ந்து போறேனே கண்ணே
புரியுதடா உன் தாகம் - இது
ஆடி அடங்காத மோகம் (ஓடுற)
புரிந்தவளே இங்கே வா வா - கண்ணால்
என்னை கவர்ந்தவளே வா வா
போதுமடா இந்தப் பேச்சு - உன்னால்
வெகுநேரம் வீணாகிப் போச்சு
ஓடுற பொண்ணே நில்லு - உன்
உறவுக்காரன் யாருன்னு சொல்லு
வழிமறிக்கிறவரே கொஞ்சம் தள்ளு - மீரி
வந்து நின்னா தெரிக்கும் பல்லு
விவசாயி
உலகம் உயருது - பல
உண்மைகள் புரியுது - ஏழை
நாடி நரம்பெல்லாம் - இன்னும்
வாடி வதங்குது
இவன்
நெல் விளைய மண் மிதிச்சான்
நேரம் பார்த்து தண்ணீர் விட்டான்
கால நேரமில்லாம காவல் காத்தான்
நெல் விளைந்து நெடு நெடுன்னு நிக்கையில - கடன்
கொடுத்தவன் நெல்ல கவர்ந்து கொண்டு போயிட்டான்
உலகம் உயருது - பல
உண்மைகள் புரியுது - ஏழை
நாடி நரம்பெல்லாம் - இன்னும்
வாடி வதங்குது
அரசாங்க சலுகைகள் அத்தனையும்
அரசியல்வாதிகள் வடிகட்டி புடிக்க
அதுல மிஞ்சிய ரெண்டு வடிஞ்சு - சாகுர
அடித்தட்டு மக்கள் வாயில விழுகுது வாய்க்கரிசி போல
உலகம் உயருது - பல
உண்மைகள் புரியுது - ஏழை
நாடி நரம்பெல்லாம் - இன்னும்
வாடி வதங்குது
உணவு,
தேடித் தேடியே தினம் ஆவியடங்குது - அந்தத்
தெருநாய் போலவே இவன் வாழ்வுமிருக்குது
ஒரு கவளச்சோருகூட இவனுயிர காக்குமப்பா,
உன் உள்ளத்தில் இடம் இருந்தா - இவன்
வயிற்று பள்ளம் நிறையுமப்பா
உலகம் உயருது - பல
உண்மைகள் புரியுது - ஏழை
நாடி நரம்பெல்லாம் - இன்னும்
வாடி வதங்குது
லேபிள்கள்:
அரசியல்வாதி,
ஏழை,
பசி,
விவசாயி,
vivasaayi
ஞாயிறு, 6 டிசம்பர், 2009
அம்மா
அம்மா!
நீ,
ஆதிசக்தியின்
திருவுருவே - அண்டங்கள்
அடிபணியும் தேவியே!
என்
ஆறடி உடலை
அலங்கரித்த மதியே!
தேவரும் மூவரும்,
நின்று தொழுகின்ற
தெய்வமே,
பக்குவமாய் என்னைப் பெற்றெடுக்க
பத்தியம் இருந்தவளே,
எதிர்பார்ப்பு இல்லாமல்
என்னை ஈன்றெடுத்தவளே.
ஒச்சமாய்ப் பிறந்தாலும்
எச்சமென்று எண்ணாதவளே..
ஊரே ஏசி வந்து நின்னாலும்,
"எம் புள்ள உத்தமன்னு" உரக்கச்
சொன்னவளே..
பத்து மாதம் கடந்து,
இன்னும் என்னை
நெஞ்சில் சுமப்பவளே.
மரண வலி பொறுத்து
என்னை மனிதனாக்கியவளே,
ஒசோன் படலமாய் இருந்து
நித்தமும் என்னை காப்பவளே,
சிப்பியைப் பெற்றெடுத்த
நன்முத்தே,
நான்
தேடாமல் கிடைத்திட்ட
திரவியமே..
என்
ஆத்ம ஜோதியின்
ஒளி விளக்கே.
உந்தன் வாய்மொழி கேட்காமல்
சலிக்கிறது வாழ்க்கை,
வலிக்கிறது நெஞ்சம்,
ஆதவனைக் காணாத - இந்த
அகிலத்தைப் போல.
நீ,
ஆதிசக்தியின்
திருவுருவே - அண்டங்கள்
அடிபணியும் தேவியே!
என்
ஆறடி உடலை
அலங்கரித்த மதியே!
தேவரும் மூவரும்,
நின்று தொழுகின்ற
தெய்வமே,
பக்குவமாய் என்னைப் பெற்றெடுக்க
பத்தியம் இருந்தவளே,
எதிர்பார்ப்பு இல்லாமல்
என்னை ஈன்றெடுத்தவளே.
ஒச்சமாய்ப் பிறந்தாலும்
எச்சமென்று எண்ணாதவளே..
ஊரே ஏசி வந்து நின்னாலும்,
"எம் புள்ள உத்தமன்னு" உரக்கச்
சொன்னவளே..
பத்து மாதம் கடந்து,
இன்னும் என்னை
நெஞ்சில் சுமப்பவளே.
மரண வலி பொறுத்து
என்னை மனிதனாக்கியவளே,
ஒசோன் படலமாய் இருந்து
நித்தமும் என்னை காப்பவளே,
சிப்பியைப் பெற்றெடுத்த
நன்முத்தே,
நான்
தேடாமல் கிடைத்திட்ட
திரவியமே..
என்
ஆத்ம ஜோதியின்
ஒளி விளக்கே.
உந்தன் வாய்மொழி கேட்காமல்
சலிக்கிறது வாழ்க்கை,
வலிக்கிறது நெஞ்சம்,
ஆதவனைக் காணாத - இந்த
அகிலத்தைப் போல.
வியாழன், 3 டிசம்பர், 2009
சரஸ்வதி
சரஸ்வதி
கலங்கமில்லா கங்கையருவி நீரெடுத்து
காணுடல் மறைத்து
திரண்ட வெண்பனியின் தெளி
முகம் கொண்டு
வீணை யோடுவேத யேடும்
கையில் ஏந்தி
வெண்தா மரை தனிலே
வீற்றிருக்கும் வாணி - நீ
நிலையில்லா இவ்வுலகில் நற்கதியும்
சங்கத் தமிழோடு
சகலமும் தந்த ருள்வாயே!
கலங்கமில்லா கங்கையருவி நீரெடுத்து
காணுடல் மறைத்து
திரண்ட வெண்பனியின் தெளி
முகம் கொண்டு
வீணை யோடுவேத யேடும்
கையில் ஏந்தி
வெண்தா மரை தனிலே
வீற்றிருக்கும் வாணி - நீ
நிலையில்லா இவ்வுலகில் நற்கதியும்
சங்கத் தமிழோடு
சகலமும் தந்த ருள்வாயே!
லேபிள்கள்:
சரஸ்வதி,
தமிழ்,
God,
saraswathi
வியாழன், 26 நவம்பர், 2009
அருவி
அருவி
உன்னை
நினைக்கும் போதெல்லம்
நிலைகுலைந்து போகிறேன்,
நான்.
உன்னைத்
தொட்ட உடனேயே
தொலைந்து போகிறேன்,
நான்.
உன்னைப்
பார்க்கும் போதெல்லாம்
பரவசமாகிறேன் - நான்
உன் வசமாகிறேன்.
உன்னோசை
கேட்கும் போதெல்லாம்
கிறங்கிப் போகிறேன்.
நீ
மலை முடியில் பிறந்தவளா?
இல்லை
மண் மடியில் மலர்ந்தவளா??
மண்ணில் பிறந்து
மலையேறும் சாமியா?
இல்லை,
மலையில் பிறந்து
மண்ணில் ஒடுங்கும் ஆசாமியா?
உன் உதிரத்தில்
ஒரு சொட்டு, என்
உடலிற் பட்டாலே, ஊண்
மறப்பேன், இவ்வுலகை
நான் மறப்பேன்.
மண்ணும் மழையும்
ஊடல் கொள்ளும் நேரம்,
மனம் தேடல் கொள்கிறது...
உன்னை
நினைக்கும் போதெல்லம்
நிலைகுலைந்து போகிறேன்,
நான்.
உன்னைத்
தொட்ட உடனேயே
தொலைந்து போகிறேன்,
நான்.
உன்னைப்
பார்க்கும் போதெல்லாம்
பரவசமாகிறேன் - நான்
உன் வசமாகிறேன்.
உன்னோசை
கேட்கும் போதெல்லாம்
கிறங்கிப் போகிறேன்.
நீ
மலை முடியில் பிறந்தவளா?
இல்லை
மண் மடியில் மலர்ந்தவளா??
மண்ணில் பிறந்து
மலையேறும் சாமியா?
இல்லை,
மலையில் பிறந்து
மண்ணில் ஒடுங்கும் ஆசாமியா?
உன் உதிரத்தில்
ஒரு சொட்டு, என்
உடலிற் பட்டாலே, ஊண்
மறப்பேன், இவ்வுலகை
நான் மறப்பேன்.
மண்ணும் மழையும்
ஊடல் கொள்ளும் நேரம்,
மனம் தேடல் கொள்கிறது...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)